எதிர்மறை விளைவுகள் பற்றி தகவலளிக்க
எதிர்மறை நிகழ்வு குறித்த தகவலளிப்பு
வியாட்ரிஸ் – ல் சுகாதார பராமரிப்பு எப்படி இருக்கிறதோ அப்படி அதை பார்க்காமல், அது எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் பார்க்கிறோம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆரோக்கியமாக வாழ உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு திறனதிகாரத்தை வியாட்ரிஸ் வழங்குகிறது. எமது தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் எமது நோயாளிகள் மற்றும் நுகர்வோர்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதே எமது வலையமைப்பு முழுவதிலும் நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதன் மைய அம்சமாக திகழ்கிறது.
ஒரு எதிர்மறை நிகழ்வு என்றால் என்ன?
ஒரு எதிர்மறை நிகழ்வு என்பது, ஒரு மருத்துவ தயாரிப்பை நோயாளிக்கு அல்லது மருத்துவ ஆய்வு பங்கேற்பாளருக்கு வழங்கும்போது நிகழக்கூடிய எந்தவொரு விரும்பத்தகாத மருத்துவ நிகழ்வைக் குறிக்கிறது. இந்த சிகிச்சையோடு தற்செயல் உறவை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லாததாக அது இருக்கலாம்.
எதிர்மறை நிகழ்வை பற்றி ஏன் வியாட்ரிஸ் – க்கு தகவலளிக்க வேண்டும்?
- இத்தயாரிப்புடன் தொடர்புடைய அறியப்படாத எதிர்மறை நிகழ்வுகளை அடையாளம் காண வியாட்ரிஸ் – க்கு எதிர்மறை நிகழ்வு குறித்த தகலளிப்பு உதவும்.
- புதிய இடர்வாய்ப்புகள் அல்லது அறிகுறிகளுக்கான பாதுகாப்பு தரவு பேழையின் வழக்கமான மீளாய்வுக்கு இத்தகவலளிப்பிற்கு வழிவகுக்கும்.
- மருந்துகளின் பாதுகாப்பு பண்பியல்புகள் மீது தற்போதைய மற்றும் துல்லியமான
நிகழ்நிலைத் தகவலை வழங்குவதற்கு எதிர்மறை நிகழ்வு அறிக்கைகள் உதவும்.
- தீவிரத்தன்மை, இயல்பு
அல்லது விளைவு குறித்து அறியப்பட்ட எதிர்மறை பதில்வினையின் மாறுபட்ட விவரக்குறிப்புகளை அடையாளம் காண
எதிர்மறை நிகழ்வு அறிக்கைகள் உதவும்.
- எனினும், மருந்துகள் அல்லது ஏதேனும் உடல்நல பாதிப்பு / மருத்துவ அவசரநிலைகள்
மீதான ஆலோசனைக்கு அவர்களது மருத்துவர் அல்லது உடல்நல பராமரிப்பு நிபுணரை தொடர்பு கொள்ளுமாறு அனைத்து நுகர்வோர்கள்
அல்லது நோயாளிகள்
அறிவுறுத்தப்படுகின்றனர்.
எதிர்மறை நிகழ்வில் என்னவெல்லாம் உள்ளடங்கும்?
எதிர்மறை நிகழ்வில் விரும்பத்தகாத மருத்துவ பாதிப்புகள் உள்ளடங்கும்; அவைகள் அறிகுறிகளாக (எ.கா. குமட்டல், மார்பு வலி, அடையாளங்களாக (எ.கா. மிகை இதயத்துடிப்பு, வீங்கிய கல்லீரல்) அல்லது ஒரு பரிசோதனையில் இயல்புக்கு மாறான முடிவுகளாக (எ.கா. பரிசோதனையக சோதனையின் கண்டறிதல்கள், எலக்ட்ரோகார்டியோகிராம் / இசிஜி)ஆகியவையாக இப்பாதிப்பு இருக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட எதிர்மறை நிகழ்வு காட்சி நிலைகள் மட்டுமல்லாது, கீழே பட்டியலிடப்பட்டுள்ள சிறப்பு சூழ்நிலை நிகழ்வுகளும் தகவலளிக்கப்பட வேண்டும்; ஒரு எதிர்மறை நிகழ்வோடு இவை தொடர்புடையதாக அல்லது தொடர்பற்றதாக இருக்கலாம்.
- ஒரு கரித்தரிப்போடு தொடர்புடைய புராடக்ட்
வெளிப்படுத்தல் (தாய் சார்ந்த, தந்தை சார்ந்த
அல்லது வளர்கரு சார்ந்த வெளிப்படுத்தல் உட்பட) போன்ற சிறப்பு சூழ்நிலை அறிக்கைகள்.
- ஒரு மருத்துவ தயாரிப்பிற்கு ஒரு பச்சிளம் குழந்தை தாய்ப்பால் அருந்துவதன் மூலம்
வெளிப்படுவது (தாய்ப்பால் வழியாக பரவல்).
- மருந்து மிகை அளவு தவறாகப் பயன்படுத்தல்
- தவறாகப் பயன்படுத்தல்
அல்லது முறைதவறிய பயன்பாடு
- லேபிளில் இல்லாத பயன்பாடு
- மருந்து நிறுத்த
விளைவுகள்
- செய்து முடித்த தயாரிப்பாக வெளியீட்டிற்குப் பிறகு பணி சார்ந்த வெளிப்படுதல்.
- மருந்து உட்கொள்ளல் அளவில் பிழைகள் (அதாவது. முறையற்ற மருந்து பயன்பாடு).
- குணமளிக்கும்
சிகிச்சை திறனின்மை.
- தொற்று ஏற்படுத்தும் முகமையின் சந்தேகிக்கப்படும் பரவல்.
- மருந்தின் பயன்பாடு
மற்றும் இடைவினைகளினால் எதிர்பாராத குணமளிப்பு அல்லது
மருத்துவப்பலன் (மருந்து – மருந்து அல்லது மருந்து – உணவின் இடைவினைகள்).
என்ன தகவலளிப்பது?
எதிர்மறை நிகழ்வுகள் பற்றிய தகவலளிப்பு, நோயாளியின் பாதுகாப்பு மீதான எமது பொறுப்புறுதியின் ஒரு முக்கிய அங்கம். ஒரு நேர்வு பற்றி தகவலளிக்க தேவைப்படும் குறைந்தபட்ச செந்தர தகவல்:
-
அடையாளம் காணக்கூடிய தகவலளிப்பாளர் (தேவைப்படுமானால், சாத்தியமுள்ள பின்தொடர்
நடவடிக்கையை வியாட்ரிஸ் எடுக்க எதிர்மறை நிகழ்வை தெரிவிக்கும் நபரின் பெயர், முகவரி
மற்றும் தொடர்பு விவரங்கள்).
- அடையாளம் காணக்கூடிய நோயாளி (எதிர்மறை நிகழ்வு ஏற்பட்டிருக்கின்ற
நோயாளியின் முதலெழுத்துகள், பாலினம், வயது அல்லது வயது பிரிவு)
- ஏற்பட்ட எதிர்மறை நிகழ்வின் விவரணை, ஏதேனும்
அறிகுறி, அடையாளம் மற்றும் எதிர்மறை நிகழ்வின் விளைவு போன்றவை.
- எதிர்மறை நிகழ்வு தெரிவிக்கப்படுவதற்கு காரணமான நோயாளியால் பயன்படுத்தப்பட்ட வியாட்ரிஸ் மருத்துவ தயாரிப்பு
மேலே பட்டியலிடப்பட்ட அனைத்து விவரங்களும் உங்களிடம் இல்லையென்றாலும் கூட, எதிர்மறை நிகழ்வு குறித்து தயவுசெய்து தகவலளிக்கவும். கூடுதலாக, எதிர்மறை நிகழ்வு பற்றி உங்களுக்கு ஏதும் பிற விவரங்கள் இருக்குமானால், அவற்றையும் தெரிவிக்கவும்.
எதிர்மறை நிகழ்வு / பதில்வினையை யார் மற்றும் எப்படி தெரிவிக்கலாம்?
மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் போன்ற சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையைச் சேராத நோயாளிகள், நுகர்வோர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் எதிர்மறை நிகழ்வுகள் பற்றி வயாட்ரிஸ் – க்கு தகவலளிக்க வேண்டும்.
பாதகமான நிகழ்வு அறிக்கை படிவத்தைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.
வியாட்ரிஸ் – ன் நோயாளி பாதுகாப்பு பிரிவை தொடர்புகொள்ள:
E-mail: pv.india@viatris.com
என்ன தெரிவிக்க வேண்டும்?
- தகவலளிப்பை நிறுவனம் சிறப்பாக பகுப்பாய்வு செய்ய உதவ முடிந்தவரை பல விவரங்களையும் வழங்கவும்.
- நோயாளியின் / தகவல் தருபவரின் இரகசியத்தைப்
பராமரிக்க வியாட்ரிஸ் பொறுப்புறுதி கொண்டிருக்கிறது.
- ஒழுங்குமுறை தேவைப்பாடுகளுக்கு
நிறுவனம் இணங்கி செயல்படுவதற்காக தேசிய சுகாதார அதிகார அமைப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ள
எதிர்மறை நிகழ்வின் தகவல் வியாட்ரிஸ் - ஆல் பகிரப்படும்.
- தகவல் / அறிக்கை சமர்ப்பிப்பு என்பது,
மருத்துவப் பணியாளர்களால் அல்லது தயாரிப்பாரால் அல்லது தயாரிப்பால் எதிர்மறை பதில்வினை ஏற்பட்டது அல்லது
அதற்கு பங்களிப்பு இருந்திருக்கிறது என்பதற்கான ஒப்புதலாக அமையாது.
தமிழ் மொழியில் எதிர்மறை நிகழ்வு பற்றிய தகவலளிப்பு ஆவணத்தை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
प्रतिकूल घटना रिपोर्टिंग को हिंदी में पढ़ने के लिए यहां क्लिक करें